Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 11 July 2014

10 வகுப்பு தேர்ச்சி குறைவுக்காக சம்பளம் கட்: ராமநாதபுரம் ஆட்சியரை கண்டித்து ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளிகளின் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரவிட்டுள்ளதற்கும், அரசு ஊழியர்களிடம் கெடுபிடியாக செயல்பட்டு வருவதற்கும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும், இட மாறுதல் செய்யக்ககோரியும், நாளை(சனிக்கிழமை) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். 

இது குறித்து போராட்ட குழுவினரில் ஒருவர், கமுதியி்ல் இன்று(வெள்ளிக்கிழமை) தெரிவித்தது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவில் 90 சதவீதம் தேர்ச்சி பெறாத பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சம்பளம் வழங்க வேண்டாம் என்று ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஜூன் மாத சம்பளம், வழங்கப்படவில்லை.

ஆட்சியரின் உத்தரவால் சம்பந்தபட்ட தனியார் பள்ளிகளி ல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் கற்பிக்கும் அனைத்து, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. அதே சமயம் 90 சதவீதம் தேர்ச்சி பெறாத அரசு பள்ளிகளில், அரசு தேர்விற்குரிய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்றும், ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சியரின் அதிரடி உத்தரவால் கமுதி தாலுகாவில் அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி, கமுதி இக்பால் உயர்நிலைப்பள்ளி, முதுகுளத்தூர் தாலுகாவில் திருவரங்கம் புனித இருதய மேனிலைப்பள்ளி, முதுகுளத்தூர் பெரிய பள்ளிவா சல் மேனிலைப்பள்ளி உள்பட பல தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரியைகள் ஜூன் மாத சம்பளம் கிடை க்காமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

இது தவிர மாவட்டத்தில் அரசுத்துறை ஊழியர்களும், ஆட்சியரின் கெடுபி டி நடவடி்ககைகளால் பாதிப்பும், மன வேதனையும் அடைந்துள்ளனர். ஆட்சியரின் நடவடிக்கைகளையும், அர்த்தமில்லாத, விசித்திர உத்தரவுகளையும் கண்டிக்கிறோம். எனவே ஆட்சியர் நந்தகுமாரை உடனடியாக இட மாறுதல் செய்யக் கோரி ராமநாதபுரம் மாவட்ட தமிழ் நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தினரும், முதுநிலை, இளநிலை பட்டதாரி ஆசிரி்யர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் ஆகியோர் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். 

ராமநாதபுரத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்கிறோம்.நிகழ்ச்சிக்கு மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் ஏ.சிவாஜி, மாவட்ட தமிழ் நாடு அரசு அலுவலர்கள் சங்க செயலர் கணேச மூர்த்தி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். பல்வேறு அமைப்புநிர் வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment