Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 15 July 2014

டிஇடி 2ம் தாள் தேர்வு வெயிட்டேஜ் பட்டியல் வெளியீடு


ஆசிரியர் தகுதித் தேர்வு 2ல் தேர்ச்சி பெற்றவர்களின், வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இறுதிப் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து வெயிட்டேஜ் தொடர்பாக சந்தேகம் இருப்பவர்கள் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள, தேதியில் தங்கள் ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று 2011ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதையடுத்து 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தாள் 2க்கான தேர்வில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 121 பேர் எழுதினர். 

அதில் 713 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். பிறகு அதே ஆண்டில் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 370 பேர் தேர்வு எழுதி 8,864 பேர் தேர்ச்சி பெற்றனர். அடுத்தகட்டமாக 2013ம் ஆண்டு நடந்த, தாள் 2க்கான தேர்வில் 4 லட்சத்து 311 பேர் எழுதினர்.42,109 பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்வு இந்த ஆண்டு நடந்தது. அதில் 4,693 பேர் தேர்வு எழுதி 945 பேர் தேர்ச்சி பெற்றனர். மேற்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் மொத்தம் 43 ஆயிரத்து 242 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதில் வெயிட்டேஜ் மதிப்பெண் போடப்பட்டன. 

வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றவர்களில் பணி நியமனம் பெறத் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.அதில் பாட வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் இன சுழற்சி முறையில் வெளியிடப்பட்டுள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோர் டிஆர்பி இணைய தளத்தில் தங்கள் பதிவெண்ணை பதிவு செய்து, வெயிட்டேஜ் பற்றி தெரிந்து கொள்ளலாம். வெயிட்டேஜ் தொடர்பாக ஏதாவது மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள மையத்துக்கு நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். 

எந்த மாவட்டத்தில் சரிபார்ப்பு:
விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் மையங்களை சேர்ந்தவர்கள் 21, 22ம் தேதிகளில் விழுப்புரம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியிலும், சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டத்தினர் 23, 24ம் தேதிகளில் விழுப்புரம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 24, 25ம் தேதிகளிலும், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தினர் 26ம் தேதி திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேனிலைப் பள்ளி, மதுரை, தேனி, புதுக் கோட்டை மாவட்டத்தினர் 21, 22ம் தேதிகளிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டத்தினர் 23, 24ம் தேதி மதுரை ஓ.சி.பி.எம் மேனிலைப் பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தினர் 25, 26ம் தேதிகளில் மதுரை, ஓசிபிஎம் மேனிலைப் பள்ளி

சேலம், நாமக்கல், மாவட்டத்தினர் 21, 22ம் தேதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டத் தினர் 23, 24ம் தேதிகளில் சேலம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, ஈரோடு, வேலூர், கோவை, நீலகிரி மாவட்டத்தினர் 25, 26ம் தேதிகளில் சேலம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நேரில் சென்று ஆட்சேபணை களை தெரிவிக்கலாம். மேலும், 2012, 2013ம் ஆண்டுகளில் நடந்த டிஇடி தேர்வு, 2014ல் நடந்த சிறப்பு டிஇடி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்தலில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள் ளது. மேற்கண்ட நபர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில் நேரில் சென்று சான்று சரிபார்ப்பு செய்து கொள்ளலாம். இதையடுத்து தாள் 2க்கான இறுதிப் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்.

No comments:

Post a Comment