Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 18 July 2014

3,459 ஆசிரியர்கள் புதிதாக நியமனம்


இந்த ஆண்டு 3,459 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவர் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்தபோது இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு:

முதல்வர் ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளில் 71,708 பணியிடங்களை அனுமதித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, 2014-15 ஆம் கல்வியாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்காக 75 விரிவுரையாளர் பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும்.

ஆசிரியர் சார்ந்த பணியிடங்களாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 15, விரிவுரையாளர் பணியிடங்கள் 40, இளநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 20 என மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் 152 உதவியாளர் பணியிடங்கள், 188 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 340 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

202 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: மாற்றுத்திறன் கொண்ட அனைத்துக் குழந்தைகளுக்காக நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் மாநில ஆதார வள மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் என்றார் அமைச்சர் வீரமணி.

No comments:

Post a Comment