திருக்குறளின் பெருமையைப் பறை சாற்றும் வகையில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்தபோது அமைச்சர் கே.சி.வீரமணி இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:
திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் உலகளாவிய அறிஞர்களும், குறள் நெறி ஆய்வாளர்களும் தமிழறிஞர்களும் பங்கேற்கும் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை உலகத் தமிழ்ச் சங்கமும் சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும்.
கருத்தரங்குகள்: உலகத் தமிழ்ச் சங்கம் வாயிலாக சிங்கப்பூர், மலேசியா ஆகிய 2 நாடுகளில் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
டிஜிட்டல்மயமாகும் பேரகரமுதலி:
வேர்ச்சொற்களை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட அகர முதலித் திட்ட இயக்ககம், 13,327 பக்கங்கள் அடங்கிய 31 தொகுதிகளைக் கொண்ட நூல்களை வெளியிட்டுள்ளது.
இந்த முப்பத்தொரு தொகுதிகளும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் இடம்பெறும்.
No comments:
Post a Comment