பீகார் மாநிலத்தின் சீதாமரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று மதியம் வழங்கப்பட்ட சத்துணவில் பாம்பு கிடந்தது தெரியவந்துள்ளது. இதனை சாப்பிட்ட 54 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப் பட்டுள்ளனர். மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு பறிமாறப்பட்ட கிச்சடி உணவை சோதனை செய்த போது அதில் கருப்பு நிறத்தில் நீளமாக மர்மப் பொருள் ஒன்று கிடப்பது தெரியவந்தது. அது பாம்பாக இருக்கலாம் என்று கருதுகிறோம். அதை சோதனைக்காக அனுப்பியுள்ளோம். என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு வருடத்திற்கு முன் பீகாரின் சரண் மாவட்டத்தில் தர்மஸதி கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment