தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு பாடல்கள் மனப்பாடப்பகுதியை படிப்பதென்றால் கசப்பானதாக உள்ளது. மனப்பாடப்பகுதி பாடல்களைத் தேர்வில் சரியாக எழுதினால் முழு மதிப்பெண்களைப் பெற முடியும்.மனப்பாடப் பாடல்களை படிக்க மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு கற்பிக்கும் தமிழாசிரியர்களுக்கு தமிழ் மனப்பாட பகுதியை இசை மற்றும் ராகத்துடன் கற்பிக்கும் முறை பயிற்சி முகாம்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பயிற்சி முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி துவக்கி வைத்தார். அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை இசையமுது பயிற்சி அளித்தார். மனப்பாட பகுதியை மாணவர்களுக்கு எவ்வாறு எளிமையாக கற்பிப்பது, பொருளுணர்ந்து படித்தல், இசையுடன் கற்பித்தல் போன்றவை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பயிற்சியில் பங்கேற்ற தமிழாசிரியர்களுக்கு தமிழ் மனப்பாட பகுதி குறுந்தகடுகள்(சிடி) வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment