வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முழு நேரப் பணியாளர்களாக கல்விப் பணி ஆற்றி வருகின்றனர்.
அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ. மாணவியர் கல்வியில் மேம்பட வேண்டும் என்று 14 வகையான விலையில்லா பொருட்களை வழங்கி முப்பருவ முறையினை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், ஆண்டு முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலராக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
நகராட்சியில் முன்பு வரி வசூலிப்பவர்கள் செய்து வந்த பணியை ஆசிரியர்கள் செய்ய வேண்டி உள்ளதால் கல்விப்பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் இந்த ஆண்டு குறைந்த சேர்க்கையே இதற்கு எடுத்துக்காட்டு. தேர்தல் ஆணையம் 13 வகையான அரசு ஊழியர்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி இருப்பதால் ஏழை குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment