பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். நுழைவுத்தேர்வு தேதி ஜூலை 27-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுவதாக இருந்தது. அதேநாளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வும் நடைபெற உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வை வேறு தேதியில் வைக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களிடம் வேண்டுகோள் வந்தது.
அதையேற்று, நுழைவுத்தேர்வு தேதி 20- ஆம் தேதிக்குப் பதிலாக 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் http://www.b-u.ac.in/ இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment