தமிழகத்தின் முதல்வராகவும், பிரதமர்களைச் சுட்டிக் காட்டியவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கடந்த 2004-ல் திரைப்படமாக வெளியானது.
அரசியல் மற்றும் கல்வியாளர்களின் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தற்போது மீண்டும் பள்ளிகளில் திரையிட தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிக்கெட்டுகளை செய்தித் துறை அலுவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். ஒரு நபருக்கு ரூ.10 என்ற விலையில் டிக்கெட் அச்சிடப்பட்டுள்ளது.
தியேட்டர் உள்ள நகரங்களில் மாணவர்கள் தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், தியேட்டர் இல்லாத ஊர்களில் பள்ளி வளாகத்திலேயே படம் திரையிடப்படும் என்றும் செய்தித் துறை அறிவித்துள்ளது. ஆனால், படம் திரையிடப்படும் தேதி விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment