பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும், மின் பிரச்சினைகளை மாணவர்களைக் கொண்டு சரிசெய்யக்கூடாது உள்ளிட்ட பல உத்தரவுகளை, பள்ளிகளுக்கு, கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளிகளில், நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும். மின் இணைப்பு, சுவிட்ச் பாக்ஸ் சரியாகஇருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில், மாணவர்களை கொண்டு, மின் சாதனங்களை இயக்கக் கூடாது.
சேதமான பள்ளி கட்டடம், சுவர்கள், ஆய்வு கூடங்கள், கம்ப்யூட்டர் அறைகளில், துண்டித்த நிலையில் உள்ள மின் ஒயர்களை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டட மேல் மாடிக்குச் செல்லும் பாதைகளை மூடவேண்டும்.
ரோட்டோர பள்ளிகள் முன், வேகத்தடை அமைத்து, தினமும் ஆசிரியரை நியமித்து, மாணவர்களை ரோட்டை கடக்க செய்ய வேண்டும்.
கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க கூடாது. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். முதலுதவி பெட்டி அவசியம் இருத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment