பள்ளிகளில், யோகா கற்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சேத் என்பவரும், பத்மபூஷன் விருது பெற்ற, டாண்டன் என்பவரும், பள்ளிகளில், யோகா போதிப்பதை கட்டாயமாக்கும்படி உத்தரவிட வேண்டும் எனக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த, மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, பள்ளிப் பாடத்தில், யோகாவையும் சேர்க்க வேண்டும். யோகா போதிப்பதை கட்டாயமாக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும் என, கோரியிருந்தனர்.இந்த மனுவை நேற்று விசாரித்த, நீதிபதி டாட்டூ தலைமையிலான, உச்ச நீதிமன்ற, பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:யோகா தொடர்பான இந்த மனுவை, நாங்கள் விசாரணைக்கு ஏற்கிறோம். அதேநேரத்தில், இந்த வழக்கில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் தவிர, அனைத்து மாநில கல்வி வாரியங்களையும், ஒரு பிரதிவாதியாக, மனுதாரர்கள் சேர்க்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment