Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 6 July 2014

சேலம் மாவட்டத்திற்கு அடுத்த சிஇஓ யார்?


சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் புதிய அதிகாரி நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் புதிதாக நியமிக்கப்படும் அதிகாரி குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவராக பணியாற்றி வந்த ஈஸ்வரன் முறைகேட்டில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் உஷா கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பொறுப்பும் இவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் கலந்தாய்வுகள் முடிந்துள்ள நிலையில், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக, கண்டிப்பான அதிகாரி ஒருவர் வரப்போவதாக தகவல் பரவியுள்ளதால் அலுவலர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முறைகேடுகளுக்கு துணை போகும் அலுவலர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாக இருவரின் பெயர் அடிபடுகிறது. இதில் ஒருவர் பள்ளிகளுக்கு இடும் உத்தரவு குறித்து அலுவலர்கள் மத்தியில் கதையாய் பேசுகின்றனர். ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு, குறிப்பிட்ட தொகையுடன் கண்டிப்பாக மதிய உணவில் நாட்டுக்கோழி குழம்பு இருக்க வேண்டும். பொன்னாடை உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எந்தக் கடையில் என்ன விலையில் பேண்ட் மற்றும் சர்ட் பிட் வாங்கி அன்பளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டளைகளையும் அவர் முன்கூட்டியே பள்ளிகளுக்கு தெரிவித்து விடுவாராம். 
அதிகாரியை மனம் குளிர கவனிக்க மட்டுமே தலைமை ஆசிரியர்கள் பெரும் தொகை செலவிட நேர்கிறதாம். இதனை ஈடுகட்டிக் கொள்ள அவர்கள் எந்த வழியை நாடினாலும் முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் அதைப்பற்றி கண்டு கொள்வதில்லையாம். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தலைவிரித்தாடும் இது போன்ற லஞ்ச லாவண்யங்களை ஒழிக்கவும், களை எடுக்க வேண்டிய ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் இனி வர உள்ள முதன்மைக் கல்வி அலுவலராவது நேர்மையானவராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் நிலவி வருகிறது.

No comments:

Post a Comment