நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேற்பார்வைகள், அரசு ஊழியர்களை விட தங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக உதவிதொடக்க கல்வி அலுவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பணிபுரிகின்றனர். இம்மாவட்டத்தில் உள்ள 14 யூனியன்களில் 26 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் உள்ளனர். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தில் இருந்து தேர்வு எழுதி, உதவி தொடக்க கல்வி அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
ஆனால் இதனை பணிமாற்றம் செய்வதாக மட்டுமே கருதி, பதவி உயர்வாக பரிசீலனை செய்யவில்லை.
இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் தங்களிடம், சம்பளம் பெறுபவர்களை விட, குறைந்த சம்பளம் பெறும் சூழ்நிலையில் உள்ளதாக வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து உதவிதொடக்க கல்வி அலுவலர்கள் கூறியதாவது: உயர்நிலை பள்ளி கல்வி அலுவலர் மூலமாகவே நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்பு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களே, தகுதி உள்ளவர்களாக இருக்கும் போது உயர்நிலைப்பள்ளி அலுவலர்களை ஏன் நியமிக்க வேண்டும் என்ற ரீதியில், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களே உதவி தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால், இது பணி மாற்றம் என்ற ரீதியிலேயே கருதப்படுவதால், 14 ஆண்டுகளாக பல்வேறு போராட்டம், உண்ணாவிரதம் நடத்தியும் எந்த பலனும் இல்லை.
மாவட்டத்தில் 26 பேர் உள்ளோம். நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் எங்கள் மூலம் சம்பளம் பெறுகின்றனர்.
உதவிதொடக்க கல்வி அலுவலர்களுக்கு கிரேடு சம்பளம் ரூ.4,700 வழங்கப்படுகிறது.
ஆனால் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,800, தலைமையாசிரியர்கள் ரூ.5,700 பெறுகின்றனர். இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் இப்பணிக்கு வராமல் தவிர்க்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, உதவி தொடக்க கல்வி அலுவலர்களின் பணியை, பதவி உயர்வாக கருதி, அதற்கேற்ப சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment