கடந்த வாரத்திலிருந்து முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை .
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று (09.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.இவ்வழக்குகள் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதியரசர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன் 39 வது வழக்காக விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி எடுத்துவரும் நிலையில். இவ்வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment