Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 13 August 2014

மானிய, ஊதிய உயர்வு நிலுவையை ஆசிரியர்களுக்கு வழங்காமல் ரூ1 கோடி வரை தேக்கம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு


திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான மானிய நிலுவை மற்றும் ஊதிய உயர்வு நிலுவை ரூ.1 கோடி வரை வழங்கப்படாமல் இருப்ப தாக தொடக்கப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் உறை யூர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சேவியர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செய லாளர் நீலகண்டன் பேசியதாவது: 
திருச்சி மாவட்டத்தில் 2013ம் ஆண்டுக்கான கற்பித்தல் மானிய கூட்டமா னது ஜனவரி 2014ல் நடத்தி கோப்புகள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட நிலையில் நாளது தேதி வரை கற்பிப்பு மானிய நிலுவை மற்றும் ஊதிய உயர்வு நிலுவை உள்ளிட்ட ரூ.1 கோடிக்கும் மேலாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண் டும். திருச்சி மேற்கு சரக உதவி தொடக்க கல்வி அலுவலகம் நீண்ட நாட்களாக பழுதடைந்த கட்டிடத்தில் இயங்குவதால் ஆசிரியர்களின் பணி பதிவேடு, அலுவலக கோப்புகள் மற் றும் ஆசிரியர்கள் நலன் கரு தியும், இந்த அலுவலகத்தை மேற்கு சரகத்துக்கு உட் பட்ட சுப்ரமணியபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு உடனடி யாக அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும்.
அந்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு நிதி யுதவி பெறும் தொடக்க மற் றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்ற கூடிய ஆசிரியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும். அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில் வரும் செப்டம்பர் 19ம் தேதி டெல்லியில் நடைபெறும் பேரணியில் திருச்சி மாவட்ட கிளை சார்பில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment