Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 8 August 2014

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 6வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது


தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 6 வது மாநில மாநாடு மதுரையில் ஆக.9ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.விஜயகுமார் மதுரையில் வியாழனன்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் ஆக-9 ம் தேதி காலை 10 மணியளவில் மாநாடு தொடங்குகிறது. இம்மாநாட்டில் 2 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகன், மேல்நிலைக்கல்வியின் இணை இயக்குநர் வை.பால முருகன், தமிழ் இந்து நாளிதழின் தலையங்க பக்க ஆசிரியர் சமஸ், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க இணைச்செயலாளர் எஸ்.சுபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேச உள்ளனர். மாலை 4 மணியளவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் கோரிக்கை முழக்கப் பேரணி கே.கே.நகர் பெரியார் வளைவில் துவங்குகிறது.

52 தீர்மானங்கள்

இந்த மாநாட்டில் மாணவர்களின் பிரச்சனை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட உள்ளது. மேல்நிலைக்கல்வியில் புற்றீசல் போல சுயநிதி நிறுவனங்கள் புகுந்துவிட் டன. இந்த நிறுவனங்கள் பிளஸ் 1 வகுப்புப் பாடங்களை முழுமையாக நடத் தாமல் மதிப்பெண்களுக்காக பிளஸ்2 பாடங்களை மாணவர்களுக்கு நடத்து கிறார்கள். இதனால் மாணவர்கள் பெரும் மனஉளைச்சலுக்குள்ளாகின்றனர். அடிப் படை கல்வியான +பிளஸ் 1 பாடத்தை முடிக்காமலேயே +2 படிப்பதால் அண்ணா பல்கலைக்கழக கணிதத் தேர்வில் 70 சத மாணவ, மாணவியர்கள் தோல்வி யடைந்துள்ளனர்.

இப்படிப்பட்ட சிக்க லில் இருந்து மாணவர்களைக் காக்க பருவமுறைத்தேர்வு என்பது +1,+2 ஆகிய வகுப்புகளில் தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.தமிழக அரசு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு இலவசங்களை வழங்கி வருகிறது. மாணவர்களுக்கான செய்முறை பயிற்சி ஏட்டை இலவசமாக வழங்க வேண்டும். இதே போன்று நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களை தனியாக வைத்து வகுப்பு நடத்தி வருகிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இப்படி நடத்தப்படுகிறது.

இதை வரவேற்கும் அதே நேரத்தில், இப்படியான அடிப்படை சிறப்புப் பயிற்சி அளிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே, பள்ளிகளில் வேலை செய்துவரும் ஆசிரியர்களை சிறப்புப் பயிற்சிக்கு அழைத்து வருவதால் ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள ஆசிரியர் இடங்களுக்கு மாற்றுப்பணி ஆசிரியர்களை அனுப்புவதால் ஏழை - எளிய கிராமப்புற மாணவர்களும், முதல் தலைமுறை கல்வி கற்க வந்த மாணவர்களும் ஆசிரியர்களின்றி பாதிக்கப்படுகிறார்கள்.தேர்ச்சி விகிதம் குறைவதற்கு ஆசிரியர்கள் தான் காரணம் என பல இடங்களில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 85 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண்கள் எடுத்த பள்ளியில் ஆசிரியர்களுக்கு 17 பி மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்த பள்ளியின் 3 தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் குறைவதற்கு ஆசிரியர்கள் மட்டும் காரணமல்ல. மாணவர்களின் கல்வி கற்கும் திறன், சமூகச்சூழல் ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். இப்படியான தண்டனைகள் ஆசிரியர் களுக்கு மன உளைச்சலைத் தந்துள்ளது. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி மூப்பு அடிப்படையில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண் டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை மாநாட்டில் விவாதிக்க உள்ளோம் என்று அவர் கூறினார். இப்பேட்டியின் போது மாநில பிரச்சாரச் செயலாளர் கே.பி.ஓ.சுரேஷ், வரவேற்புக்குழுத்தலைவர் பி.பாஸ்கர் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment