முட்காடுகள் மற்றும் மயானத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்குச் செல்லும் ஆசிரியைகள், ஊழியர்கள், பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந் துள்ளனர்.
திருவள்ளூர் - சி.வி.நாயுடு சாலையில் உள்ள வாடகை கட்டிடம் ஒன்றில், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் அலுவலகம் போதிய இடவசதி யில்லாமல் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதையடுத்து, கல்வி துறை அதிகாரிகள், ஆசிரியர் கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அரசுக்கு சொந்த மான இடத்தில் போதிய இட வசதியுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை அலுவலகம் உள்ளிட்டவை கொண்ட பெருந்திட்ட வளாகத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று தளத்துடன் கூடிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அமைக்கப்பட்டது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவ ருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுடன் அமைக் கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை, கடந்த 2011 -ம் ஆண்டு, முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
ஆனால், இந்த அலுவலகத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் துறை அலுவலகம் வழியாக செல்ல முடியாது. மாறாக, பிரதான சாலையான திருத்தணி சாலையை ஒட்டியுள்ள பொதுப்பணித் துறை கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் அலுவலகம் வழியாகத்தான் செல்ல முடியும்.
அதுமட்டுமல்லாமல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவ லகத்துக்கு திருத்தணி சாலையில் இருந்து அரை கி.மீ., தூரம் நடந்து செல்லவேண்டும். அப்படி செல்லும் போது, முட்காடுகள் மற்றும் சுற்றுச் சுவர் இல்லாத மயானத்தைக் கடந்து தான் செல்லவேண்டும்.
இதனால், நாள்தோறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு பணி நிமித்தமாக சென்றுவரும் இருநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஆசிரியை கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், சுற்றுச் சுவர் இல்லாத மயானம் மற்றும் முட்காடுகள் பகுதியைக் கடந்து செல்லும்போது, அப்பகுதி யில் மது அருந்தும் சமூக விரோதிகளால் பல்வேறு இன்னல் களுக்கு உள்ளாகிறார்கள்.
குறிப்பாக, கடந்த ஒரு மாதத் துக்கு முன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை, மயானப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சமூக விரோதிகள் சிலர் துரத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், சுற்றுச் சுவர் இல்லாத மயானத்தில் சடலங்களை புதைக் கும் போதும், எரியூட்டும் போதும் பலவித சிரமங்களுக்கு உள்ளாவ தாக அச்சத்தில் உறைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள், ஆசிரியை கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த தாவது: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை அலுவலகம் வழியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வருவதற்கான சாலை அமைக்கும் திட்டம், மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது. அதனை விரைவில் செயல் படுத்த கோரிக்கை வைத்துள்ளோம்.
முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வருவதற்கு தற்போது பயன்படுத்தப்படும் சாலையில் அடிக்கடி போலீஸ் ரோந்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment