Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 13 August 2014

அரசு பள்ளிகளின் தரம் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆய்வுப் பணி


தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த ஆய்வு 3 இயக்குநர், 12 இணை இயக்குநர்கள் தலைமையில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வித் தரம், ஆசிரியர்கள் செயல்பாடு, பள்ளி நிர்வாகம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள் ளது. இதன்படி இன்று முதல், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வுப் பணி நடக்கிறது. இதில், 32 மாவட்டங்கள் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 7 நாட்கள் இந்த ஆய்வு நடக்கிறது. பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ஆகியோர் தலைமையில் 12 இணை இயக்குநர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளனர். ஆய்வுப் பணி இரண்டு பிரிவுகளாக நடக்கிறது. தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்படுவார்கள். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் நடக்கும் ஆய்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 

கல்வி சார்ந்த ஆய்வில் பாட வாரியாக ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகின்றனர். மாணவர்களின் கற்றல் திறன் எப்படி உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். முடிவில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டிய பள்ளிகளுக்கு ஷீல்டுகள் கிடைக்கும். ஆனால், 75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி காட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு வசதியாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் சுமார் 15 லட்சம் மாணவ மாணவியர் இந்த பயிற்சி கையேடுகளை பெறுவார்கள்.

No comments:

Post a Comment