Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 4 August 2014

மாணவனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் கைது - தறகாலிக பணியிடை நீக்கம்


பெரம்பலூர் அருகே, 3ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஊராட்சி ஒனஅறிய தொடக்கப் பள்ளி ஆசிரியரை பெரம்பலூர் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை
கைது செய்தனர். மேலும், அவரை தறகாலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டார்.

பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி முத்துலட்சுமி (43) தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அந்த பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும் பெரியசாமி மகன் கோபியை (8), சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தால் கடந்த 1ம் தேதி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி குச்சியால் அடித்ததாக தெரிகிறது. இதனிடையே, சனிக்கிழமை வீட்டிலிருந்த கோபியின் உடலை அவனது பெற்றோர் பார்த்து, காயம் இருந்ததால் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து, மாணவனின் தாய் ராஜேஸ்வரி பெரம்பலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் நாகவள்ளி வழக்குப் பதிந்து, தலைமை ஆசிரியர் முத்துலட்சுமியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தார்.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எலிசபெத் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment