Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 8 August 2014

செப்., மற்றும் அக்., மாத மேல்நிலை துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


"வரும் செப்., மற்றும் அக்., மாதங்களில் நடக்கும் மேல்நிலை துணைத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்" என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தகுதியான தேர்வர்கள், மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று, தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தேர்வு எழுதி, குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், அதே பாடங்களை மீண்டும் எழுதலாம். அவர்கள் "மறுமுறை தேர்வர்" எனப்படுகின்றனர்.

பள்ளி மாணவராக உள்ள பட்சத்தில், படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து, பள்ளிக்கு போதிய வருகை நாட்கள் வந்ததற்கான சான்றை இணைக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ஒரு பாடத்துக்கு தலா 50 ரூபாய், இதர கட்டணம் ரூ.35, ஆன்-லைன் பதிவு கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

நேரடி தனித் தேர்வர்களுக்கு கட்டண விகிதம் மாறுபடும். தேர்வு கட்டணம் 150 ரூபாய், இதர கட்டணம் 35 ரூபாய், ஆன்-லைன் பதிவு கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். இக்கட்டணங்களை பணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தை பதிவு செய்தபின், தனித் தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் உள்ள விண்ணப்ப எண் முக்கியம் என்பதால், அதை பத்திரமாக, தேர்வர், வைத்திருப்பது அவசியம். வரும் 14ம் தேதி மாலை 5.00 மணி வரை, விண்ணப்பத்தை பதிவு செய்ய, கால அவகாசம் தரப்பட்டுள்ளது. ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில், சிறப்பு மையங்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, காங்கயம் அரசு பள்ளி, அவிநாசி அரசு ஆண்கள் பள்ளி, தாராபுரம் என்.சி.பி., நகராட்சி பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் பள்ளி ஆகிய ஆறு மையங்கள், தனித்தேர்வர் விண்ணப்பிக்கும் சிறப்பு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment