அடுத்த ஆண்டு நடைபெறும் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது முக்கிய பாடங்களுக்கு டம்மி எண் என்ற நடைமுறை இருந்து வந்தது. இதற்கு பதிலாக மாற்று முறை கடைப்பிடிக்க தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் அரசு தகவல் தொகுப்பு விபர மைய துணை இயக்குநருடன் கல்வித்துறை சார்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
அதன்படி ‘பிளையிங் ஷீட்' எனப்படும் எடுகுறி சீட்டுக்கு பதிலாக தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாளுடன் தேர்வரின் புகைப்படம், தேர்வரின் விபரங்கள் மற்றும் பார்கோடு இடம்பெறும் ‘டாப் ஷீட்Õ என்ற படிவம் அரசு மைய அச்சகத்தில் அச்சிட்டு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை ஏற்கனவே நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 10, 12ம் வகுப்புக்கு அமல்படுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதால் வரும் பொதுத் தேர்விலும் இந்த முறையை நடைமுறைப்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: பிளஸ் 2 தேர்வில் பயன்படுத்தக்கூடிய அனைத்து பாடங்களுக்கான முதன்மை விடைத்தாள்கள் எடுகுறி சீட்டு (பிளையிங் ஷீட்) இல்லா மல் அச்சிடப்பட வேண்டும். மேல்நிலை தேர்வுக்கான முதன்மை விடைத் தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 16ல் இருந்து 40 ஆக உயர்த்தப்படும்.
இதனைபோன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதன்மை விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட வேண்டும். முதன்மை விடைத்தாளில் பக்கங்கள் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய முதன்மை விடைத்தாள் மார்ச், ஏப்ரல் 2014ல் நடைபெறுகின்ற 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் அதிகபட்சம் 400 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வொரு அறையி லும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத வேண் டும் என்று தமிழக பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆய்வில் பல தேர்வு மையங்களில் தகுந்த வசதிகள் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட இருக்கிறது' என்றார்.
No comments:
Post a Comment