Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 18 December 2013

பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் 12 விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது


விளையாட்டு மேம்பாட்டுக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.10 கோடி ஒதுக்கியதையொட்டி பள்ளிக்கூட மாணவர்களுக்கான 12 வகையான விளையாட்டு போட்டிகள் மாநில அளவில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
ஜெயலலிதா ரூ.10 கோடி ஒதுக்கீடு
பள்ளிக்கூட மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிப்பதற்காகமுதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.10 கோடியை ஒதுக்கி உள்ளார். இதை யொட்டி பள்ளிக்கூட மாணவர்-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. தேசிய அளவிலான போட்டிக்கும் அனுப்பப்படுகிறார்கள்.
தற்போது மாநில அளவில் 12 வகையான விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 29-ந்தேதி நடத்தப்படுகின்றன. அந்த போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட இருக்கின்றன.
விரைவு சைக்கிள் போட்டி, சிலம்பம், ஜூடோ ஆகிய போட்டிகள் இன்று தொடங்கி 20-ந்தேதி வரை ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது.
குத்துச்சண்டை, வாள்சண்டை (பென்சிங்) கேரம் ஆகியபோட்டிகள் விழுப்புரத்தில் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கின்றன.
ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், டேக்வொண்டோ( கராத்தேபோன்ற விளையாட்டு) ஆகியபோட்டிகள் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சேலத்தில் நடைபெற இருக்கிறது.
டென்னிக்காய்ட், கடற்கரை வாலிபால், நீச்சல் ஆகிய போட்டிகள் 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
பரிசுகள்
இந்த மாநில அளவிலான போட்டிகளில் முதல் இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.1,200 பரிசும், 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.800 பரிசும், 3-வது இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.400 பரிசும் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும் சில பரிசுகளும் கொடுக்கப்பட இருக்கின்றன.
இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment