Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 23 December 2013

பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறுகள்: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும், மார்ச் மாதம், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்பில் சேர்வதற்கான கனவோடு, மாணவ, மாணவியர், இரவு, பகலாக படிக்கின்றனர். உயிரியல் பாடத்தில், அதிக மதிப்பெண் பெற்றால் தான், மருத்துவத் துறையில் சேர முடியும். பிளஸ் 2 உயிரியல் பாடப்பிரிவான விலங்கியல் புத்தகத்தில், ஆங்கில வழி பாட புத்தகத்துக்கும், தமிழ் வழி பாட புத்தகத்துக்கும் இடையே, ஏராளமான தவறுகள் உள்ளதால், மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.ஏற்கனவே வழங்கிய புத்தகத்தில், கடந்த வாரம் நடத்தப்பட்ட பாடத்தில், தவறு இருப்பதை அறிந்து, பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவித்து வருகின்றனர்.இதனால், பாட புத்தகத்தில் உள்ள தவறான கேள்வியை கேட்கும் போது, ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மதிப்பெண்களை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

*விலங்கியல் தமிழ் வழி பாட புத்தகத்தில், பக்கம், 82ல், 'கழிவு நீக்கம்' பாடத்தில், 'மனிதனின் ரத்தத்தில் யூரியா, 0.04 கிராம் / 100 மி.லி., என்ற விகித்திலும், சிறுநீரில், 0.2 கிராம் / 100 மி.லி., விகிதத்திலும்' காணப்படுகிறது என, உள்ளது.ஆங்கில வழி பாட புத்தகத்தில், இவை இடம் பெறவில்லை. மேலும், இப்
பகுதியை அடிப்படையாக வைத்து, புத்தகத்தில் கேட்கப்பட்டுள்ள வினா மற்றும் அதற்கான விடைகளும் தவறாக உள்ளது.
*பக்கம், 237ல் வினா, 22ல் சரியான விடையை தேர்ந்தெடுக்க என்ற பகுதியில், 'ரத்தத்தில் யூரியாவின் அளவு? அ. 0.02 கிராம் / 100 மி.லி., ஆ. 0.06 கிராம் / 100 மி.லி., இ. 0.08 கிராம் / மி.லி., ஈ. 0.01 கிராம் / 100 மி.லி.,' என, கொடுக்கப்பட்டுள்ள, நான்கு விடைகளும் தவறாக உள்ளது.
*விலங்கியல் ஆங்கில வழி பாடப்பிரிவு புத்தகத்தில் பக்கம், 38ல், பிளாஸ்மா குறித்த விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழி பாட புத்தகத்தில், இத்தகவல் இடம் பெறவில்லை.
*விலங்கியல் தமிழ் வழி பாடப்பிரிவு புத்தகத்தில் பக்கம், 87ல், 'சிறுநீரகம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய, 180 லிட்டர் ரத்தம் வடிபொருளை வடிகட்டுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழி பாடத்தில், 'ஒரு நாளைக்கு, 1,500 லிட்டர் ரத்தம் வடிபொருளாக வடிக்கட்டுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
*தமிழ் வழி பாடப்பிரிவு பக்கம், 238ல், சிறுநீரகம் நுண்குழல்களில், திரும்ப உறிஞ்சப்படும் யூரியாவின் அளவு? என்ற கேள்விக்கு, 'அ. 5 கிராம், ஆ. 17 கிராம், இ. 21 கிராம், ஈ. 20 கிராம்' என, கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தவறான விடை. 86ம் பக்கத்தில், இதற்கான அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 28 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி விலங்கியல் பாட ஆசிரியர் சக்திகுமார் கூறியாதவது:பாட புத்தகங்களை பொறுத்தவரையில், மேலாய்வாளர்கள் மற்றும் குழுத் தலைவர் மூலம் ஆய்வு செய்யப்பட்ட பின், தயாரிக்கப்படுகிறது. விலங்கியல் பாடத்தில், பல்வேறு தவறு நடந்துள்ளது. இதை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில், இப்பாடங்களில் கேள்வி கேட்கும் போது, மாணவர்கள் பதில் தெரியாமல் விடுகின்றனர். அரை மதிப்பெண் குறைந்தால் கூட, மருத்துவ கல்விக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். கல்வித் துறை இதில் கவனம் செலுத்தி, தவறுகளை சரி செய்வதுடன், இதுபோன்ற கேள்வி கேட்டால் என்ன செய்ய வேண்டுமென்பதை தெளிவு படுத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment