Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 14 December 2013

8ம் வகுப்பு மாணவர்கள் படிப்புதவி பெற பிப்ரவரியில் தேர்வு...


தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு பிப்ரவரி 22ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புவோர் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்க என்.எம்.எம்.எஸ் தேர்வு அனைத்து வட்டார  அளவில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு வரும் 2014 பிப்ரவரி 22ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை தேர்வுத்துறை இணைய  தளத்தில் இருந்து 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 8ம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியர் இந்த தேர்வை எழுதலாம். பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல்  இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்களை பொருத்தவரை 2012 2013ம் ஆண்டில் ஏழாம் வகுப்பு படித்து முழு ஆண்டுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

பிற மாணவர்கள் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட என்.எம்.எம்.எஸ் தேர்வுக்கு விண்ணபிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். போட்டோவுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 25ம் தேதிக்குள் ரூ.50 செலுத்தி ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் அவற்றை இணைய தளம் மூலம் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.மேலும் அந்த விண்ணப்ப நகல்களை ஜனவரி 2ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment