Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 22 December 2013

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்தரவு

உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
2014ம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், உயர்நிலை, மேல்நிலை ஆகிய இரண்டில், எதிலிருந்து மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற விரும்புகிறார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்களால் அளிக்கப்படும், விருப்ப உரிமை இறுதியானது, எதிர்காலத்தில் எந்தவித காரணத்தினாலும் மாற்ற இயலாது. மாவட்ட கல்வி அலுவலராக, பதவி உயர்வு, பணி மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்து விட்டு, பதவி உயர்வு அளிக்கும்போது, தனது விருப்பமின்மையை தெரிவிப்பதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால், நிர்வாக பணிகளில் காலதாமதம் ஏற்படுவதோடு, மீண்டும் ஒரு துணை தேர்வாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, விருப்ப உரிமை அளிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெறவிருக்கும், தலைமை ஆசிரியர்கள், 2009 ஜன.1ம் தேதி முதல், 2013 டிசம்பர் 31 வரை உள்ள காலங்களுக்கு பணிக்காலத்தில் அவரின் தலைமையில் பள்ளியின் சிறப்பு வரவு, செலவு திட்ட அறிக்கை தவறாமல் பெற்றனுப்பட வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் சார்பில் விருப்ப கடிதம் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த ஆண்டு அளித்திருந்தாலும், இந்த ஆண்டும் புதிய விருப்ப கடிதம், படிவம் இணைத்தனுப்ப வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனரகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment