10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 12-ம் வகுப்புத் தேர்வுகளில் வழங்கப்படும் முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 16-லிருந்து 40 ஆக உயர்த்தப்படும். 10-ம் வகுப்புத் தேர்வில் வழங்கப்படும் முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 8-லிருந்து 32 ஆக உயர்த்தப்படும். இவையனைத்தும் மார்ச் - ஏப்ரல் 2014 தேர்வு முதல் அமல் செய்யப்படும்.
முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுவதால் அந்தப் பக்கங்களுக்குள்ளேயே தேர்வர்கள் விடைகளை எழுதிவிட முடியும். அதனால் கூடுதல் விடைத்தாள்களை வாங்கி நூல் கொண்டு கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது.
இதனால் விடைத்தாள்கள் காணாமல் போவதும் தவிர்க்கப்படும். மேலும் அறைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் விடைத்தாள்களை வழங்க வேண்டிய நிலை இல்லாததால், அவர்கள் கண்காணிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட முடியும். இதனால் தேர்வு அறைக் குற்றங்கள் தவிர்க்கப்படும். ஏற்கெனவே இருப்பில் உள்ள பழைய முதன்மை மற்றும் கூடுதல் விடைத்தாள்களை 10, 12 -ம் வகுப்பு அரையாண்டு, இறுதித் திருப்புதல் தேர்வுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment