பெண் கல்வியை ஊக்குவித்தல், இடைநிற்றல் கல்வியை தவிர்க்க, அரசு, அரசு உதவி பெறும் 9ம் வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
வங்கியில் மாணவிகளின் பெயரில் கணக்கு துவங்கி அதில் நேரடியாக இத்தொகையை போடும் திட்டத்திற்காக மாநிலந்தோறும் எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளின் எண்ணிக்கை சேகரித்து வங்கிகளில் கணக்கு துவங்கினர்.
நடப்பாண்டு (2013-14) வரை வங்கி கணக்கு துவங்கியும், வங்கி குறியீட்டு எண் (ஐ.எப்.சி.,கோடு) இன்றி மத்திய அரசின் உதவித் தொகை கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஏற்கனவே கொடுத்த அறிவுரைப்படி வங்கியில் சேமிப்பு கணக்கு இருந்தால் மட்டும் போதும், என்பதால் கோடு நம்பரை கம்ப்யூட்டரில் கல்வித்துறையினர் ஏற்றவில்லை.
கடந்த 2013-14ம் கல்வியாண்டிற்கு ஐ.எப்.சி., தவிர 2008 முதல் 2012-13ம் கல்வியாண்டிற்குரிய மாணவிகளுக்கான ஐ.எப்.சி., கோடு நம்பர் ஏற்றுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவிகளை தேடி பிடிக்கும் சூழ்நிலைக்கு கல்வித்துறை ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், "ஏற்கனவே உள்ள உத்தரவின்படி வங்கி கணக்கு எண்களை அனுப்பியுள்ளோம். ஐ.எப்.சி., கோடு இருந்தால் மட்டுமே உதவித்தொகை மாணவிகளின் கணக்கில் சேர்க்கப்படும் என்ற புதிய உத்தரவால் படித்து முடித்த மாணவிகளை தேடி பிடித்துகணக்கு துவங்கிய வங்கி பெயர், ஐ.எப்.சி., கோடு எண்களை சேகரிக்கிறோம். விரைவில், இப்பணி முடிந்து 4 ஆண்டுக்குரிய உதவித்தொகை வழங்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment