கேரளாவில், மாணவனின் தலைமுடியை வெட்டிய, விளையாட்டு ஆசிரியை, பள்ளியிலிருந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆசிரியை மீது, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ளது, நெடுமங்காடு என்ற சிறிய நகரம். இங்குள்ள ஒரு பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விளையாட்டு பாடப் பிரிவு நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு மாணவன், நீளமாக தலைமுடி வளர்த்திருந்தான். இதைப் பார்த்து, விளையாட்டு ஆசிரியை, கடும் கோபம் அடைந்தார்.
அந்த மாணவனை அழைத்து, அவன் தலைமுடியை, கத்திரியால், சரமாரியாக, வெட்டித் தள்ளினார். அழுதபடி, வீட்டுக்கு சென்ற மாணவன், தன் பெற்றோரிடம், இது குறித்து முறையிட்டான். இதையடுத்து, மாணவனின் பெற்றோர், போலிசில் புகார் அளித்தனர். விளையாட்டு ஆசிரியை மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கும், போலீசார், அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையறிந்த, பள்ளி நிர்வாகம், அந்த ஆசிரியையை, அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த விவகாரம், திருவனந்தபுரம் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment