வாரந்தோறும் திங்கள் மக்கள் குறைதீர் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. பென்ஷன் தொடர்பாக ஓய்வு பெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இக்குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். மனுக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் அதிகரித்தது. இதை கட்டுப்படுத்தவும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு விரைந்து நிவாரணம் கிடைக்கவும் வழி செய்யும் வகையில் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, "ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் திங்கள் கிழமை ஒவ்வொரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்திலும் (ஏ.இ.இ.ஓ.,) நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் எந்த ஏ.இ.இ.ஓ., அலுவலக கட்டுப்பாட்டு அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றார்களோ, அந்த அலுவலகத்திலேயே சென்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். இக்கூட்டத்தை ஏ.இ.இ.ஓ.,க்கள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். "கலெக்டர் உத்தரவுப்படி, உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும். இக்கூட்டத்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்' என, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment