அதிகாரிகளின் அலட்சியத்தால் உதவித்தொகை பெறுவதில் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கத் தொகையை வழங்குகின்றன. சமீபத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு தேசிய திறனாய்வு தேர்வை நடத்தியது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஐந்தாயிரத்தை வழங்குகிறது. ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும் பல மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் உதவித்தொகையை பெற பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் கணக்கு தொடங்க அதிகாரிகள் உத்திரவிட்டுள்ளனர்.
இந்த வங்கி கிளை இல்லா ஊர்களில் படிக்கும் மாணவர்களும் இந்த வங்கி கிளைகள் உள்ள ஊர்களுக்கு சென்று கணக்கை தொடங்க வேண்டியதுள்ளது. இதனால் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள வேடசந்தூர் வந்து கணக்கை தொடங்க வங்கியை அணுகினால் ஏதாவது ஒரு காரணம் கூறி அலைக்கழிக்கப்படுகின்றனர்.
அவர்கள் பள்ளிக்கு அருகில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு இருந்தும், இதை ஏற்க மறுக்கின்றனர். இதனால் மாணவர்கள் அலைக்கழிப்பிற்கு ஆளாகின்றனர். அருகில் உள்ள வங்கியில் கணக்கை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment