படப்பை: மாவட்டத்தில் உள்ள, 650க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, மொத்தம், 2,29,658 அடி சுற்றுச்சுவர் தேவை என, கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி நடைபெறாத வேளைகள் மற்றும் விடுமுறை நாட்களில், சமூக விரோதிகளின் கூடாரமாக, பள்ளிகள் மாறிவிடுகின்றன .
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 650க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு, மொத்தம், 2,29,658 அடி சுற்றுச்சுவர் தேவை என, கணக்
கெடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறை, குடிநீர், மதிய உணவு தயாரிப்பதற்கான சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் காஞ்சிபுரம் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்றியமையாததாக உள்ளன.
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள், அடிப்படை வசதிகள் இன்றி, மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சமூக விரோத செயல்இதையடுத்து, மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம், மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேவை குறித்து, பட்டியல் தயாரித்துள்ளது. இந்தப் பட்டியல், மாவட்ட நிர்வாகத்திற்கு, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 350க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் தேவை. இவற்றில், நூற்றுக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் இடிந்து விழும் அபாய நிலையில்
இருக்கின்றன. வகுப்பறைகள் இல்லாததால், இந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு மரத்தடியிலும், வராண்டாவிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதோடு, 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறை வசதியும், 42 பள்ளிகளில் சமையல் பாத்திரங்களும், 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதியும் கிடையாது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்பறைக்கு எளிதாக செல்ல, 100 பள்ளிகளில், சாய்தள வசதி ஏற்படுத்தவில்லை.நிர்வாக சீர்கேடுகளால்....காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பெரியநத்தம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய உயர்நிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட, 2009ம் ஆண்டு 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி துவங்கியது.
பின்னர், அந்த பணி சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் துவக்கப்படவே இல்லை.இதுகுறித்து, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரியநத்தம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க ஒதுக்கிய பணத்தை, அப்போது ஊராட்சித் தலைவர் கையாடல் செய்துவிட்டார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை முடிவுக்கு வந்ததும். சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மீண்டும் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment