Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 19 January 2014

மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்

 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட பணி ஆணை நேற்று, வழங்கப்பட்டது.தமிழகத்தில், மத்திய அரசின் நிதி உதவியுடன், இரண்டு, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள் உள்ளன. சேலம் மாவட்டம், அபிநவத்திலும், விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமலையிலும் இப்பள்ளிகள் செயல்படுகின்றன. இரண்டு பள்ளிகளிலும், 400 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 25 ஆசிரியர்கள், பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இது வரை, காலமுறை பணி ஆணை வழங்கப்படவில்லை. அந்த ஆணை நேற்று வழங்கப்பட்டது. தமிழக பழங்குடியினரின், கல்வி வளர்ச்சிக்காக, ஏகலைவா மாதிரி பள்ளிகளை கூடுதலாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment