Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 20 February 2014

பி.எஃப். வட்டியில் 0.25% உயர்த்த அரசு பரிசீலனை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (ஈ.பி.எஃப்) வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் கொடிகுன்னில் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் புதன்கிழமை பதிலளிக்கையில், ""2013-14-ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.75 சதவீதமாக நிர்ணயிக்கும்படி ஈ.பி.எஃப். அமைப்பை நிர்வகித்து வரும் மத்திய பொறுப்பாளர்கள் வாரியம் (சி.பி.டி) பரிந்துரை செய்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டைவிட (2012-13) 0.25 சதவீதம் அதிகம்.
தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வருவாயின் அடிப்படையில்தான் அதற்கான வட்டி விகிதத்தை முடிவு செய்ய முடியும்.
அந்த வகையில் இந்த நிதியாண்டில் கிடைத்துள்ள வருவாயின் அடிப்படையில் 8.75 சதவீத வட்டி விகிதத்தை சி.பி.டி. பரிந்துரை செய்துள்ளது'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment