தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில், தொடக்கப் பள்ளிகளே இல்லை என ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந் தர் கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில், ஓராசிரியர் பள்ளி திட்டத்தின் 7ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர்.நடராஜ் மற்றும் சென்னை வருமான வரித்துறை இயக்குனர் ஜிபேந்திர என்.கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆர். நடராஜ் பேசியதாவது: சுவாமி விவேகானந் தர் அபிவிருத்தி சங்கம் சார்பில் 2006ல் ஓராசிரியர் பள்ளி திட்டம் துவங்கப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 500 கிராமங்களில், ஓராசிரியர் பள்ளி செயல் பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில் தொடக்கப் பள்ளிகளே இல்லை. தனியார் பள்ளிகளின் வளர்ச்சி 16 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருந் தாலும் குக்கிராமங்களில் இன்னும் பள்ளிகள் தொடங்கப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment