Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 23 February 2014

பிளஸ் 2 தேர்வு: அறை கண்காணிப்பு பணிக்கு 1,181 ஆசிரியர்கள் நியமனம்

இந்தாண்டில் நடைபெற இருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 23,606 மாணவர்கள் பங்கேற்க இருக்கும் நிலையில், இத்தேர்வுக்கான கண்காணிப்பு பணிக்கு 1,181 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.ஆனந்தி வெளியிட்ட செய்தி:  பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி  நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 59 தேர்வு மையங்களில் 169 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 22,709 மாணவ, மாணவிகள்,  தனித்தேர்வர்களாக 897 பேர் என மொத்தம் 23,606 பேர் பங்கேற்க உள்ளனர்.
  இதற்காக, 7 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 59 தலைமையாசிரியர்கள், துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 82 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1,181 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
 மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலர்கள் தலைமையில் 177 ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையத்தில் புகார் பெட்டி வைக்கப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேர்வு காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றா

No comments:

Post a Comment