Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 5 February 2014

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறைத் தேர்வு 13-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தேர்வு வருகிற 13-ம் தேதி தொடங்கி, 25-ம் தேதி வரையில் நான்கு மண்டலங்காக பிரித்து நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் பிளஸ்2 செய்முறைத் தேர்வு பிப்-10ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 26-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 13-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 25ம் தேதி வரையில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வை மாவட்டம் முழுவதும் 4 மண்டலங்களாக பிரித்து இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகியவைகளுக்கான செய்முறைத் தேர்வு குறிப்பிட்ட அந்தந்த நாள்களில் நடத்தப்பட இருக்கிறது.
பிளஸ்2 செய்முறைத் தேர்வை மண்டலம் வாரியாக எந்தெந்த நாள்களில் நடத்தவது, தொடர்பாக வருகிற 11-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். தற்போது, செய்முறை தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மும்முரமாக தயராகி வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் வெவ்வேறு வினாத்தாள்கள் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது, இத்தேர்விற்கான மேற்பார்வை ஆசிரியர்கள் பட்டியல்  தயார் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார். 

No comments:

Post a Comment