Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 4 February 2014

பொன்மலை அருகே ரயில்வே கேட்டில் வேன் சிக்கியது: பள்ளி மாணவ,மாணவிகள் 20 உயிர் தப்பினர்

திருச்சி பொன்மலை அருகே திங்கள்கிழமை இரு வேன்கள் போட்டி போட்டுக்கொண்டு முந்தி சென்றதில் ஒரு வேன் ரயில்வே கேட்டில் சிக்கியது. இதில் பயணம் செய்த பள்ளி மாணவ,மாணவிகள் 20 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பொன்மலை அருகே உள்ள கல்கண்டார்கோட்டை, ராஜீவ்காந்தி நகர் செல்லும் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. திருச்சி, தஞ்சை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் இந்த கேட்டை கடந்து  தான் செல்லவேண்டும். இந்த நிலையில் திங்கள்கிழமை தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி பயணிகள் ரயில் வருவதை அறிந்த ரயில்வே ஊழியர் கேட்டை மூடிக்கொண்டு இருந்தார்.
அப்போது போட்டி போட்டுக்கொண்டு முந்திக்கொண்டு வந்த இரு வேன்களில் ஒன்று கேட்டின் மீது மோதி தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. அப்போது வேன்களில் இருந்த குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டதை அறிந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதியினர் திரண்டு வந்து பார்த்த போது அந்த வேனில் காட்டூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 20 பேர் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகளையும், சிகிக்கிகொண்ட வேனையும் மீட்டனர். இச்சம்பவம் குறித்து திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் வேனை மீட்டுக்கொண்டு இருந்த சில விநாடியில் தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில் இந்த தண்டவாளத்தை கடந்து சென்றது. இதே சில விநாடிகளில் இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் பெருவிபத்து ஏற்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment