Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 7 February 2014

2,269 இடங்களை நிரப்ப மே 18ல் குரூப் - 2 தேர்வு

"உதவியாளர், குமாஸ்தா உள்ளிட்ட பணிகளில், காலியாக உள்ள, 2,269 இடங்களை நிரப்ப, மே, 18ல், போட்டி தேர்வு நடக்கும்' என, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்து உள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், "கிளர்க்' என்ற குமாஸ்தா நிலையில், 2,269 பணியிடங்கள், காலியாக உள்ளன. 2012 - 13ல் ஏற்பட்ட இந்த காலி இடங்களை நிரப்ப, மே, 18ல், போட்டி தேர்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. பட்டதாரிகள், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, மார்ச், 5 வரை விண்ணப்பிக்கலாம். வங்கி அல்லது அஞ்சலகங்களில், கட்டணம் செலுத்த, மார்ச், 7 கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தை பார்வை இடலாம்.

No comments:

Post a Comment