பிளஸ் 2, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு விடைத்தாள்களை 10 நாட்களில் திருத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. மார்ச் இறுதியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. விடைத்தாள்களை திருத்துவதற்காக, 32 மாவட்டங்களில் 66 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 36 மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மறுகூட்டல் நடத்தப்பட்டபோது ஏற்பட்ட குளறுபடிகளை தவிர்க்க, அந்தந்த பாடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதிகபட்சம் 10 நாட்களில் முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தேர்வு முடிவுகளும் விரைவாக வெளியாக வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment