Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 7 February 2014

பி.இ., சேர்க்கைக்காக 3 லட்சம் விண்ணப்பம் அச்சடிப்பு


பி.இ., சேர்க்கைக்காக, மூன்று லட்சம் விண்ணப்பங்களை அச்சிட, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்து உள்ளது. விண்ணப்பம் மற்றும் தகவல் புத்தகம் அச்சிட, 2.2 கோடி ரூபாய்க்கு, "டெண்டர்' அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. இதில், 2.34 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. இந்த ஆண்டு, புதிய கல்லூரிகள் வரவு மற்றும் தனியார் கல்லூரிகளின், "சரண்டர்' இடங்கள் ஆகியவை காரணமாக, மேலும் சில ஆயிரம் இடங்கள், கூடுதலாக, கலந்தாய்வுக்கு வரும்.
இதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, மூன்று லட்சம் விண்ணப்பங்களை அச்சிட, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது. விண்ணப்பம் மற்றும் கல்லூரிகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் அச்சிட, கடந்த, 31ம் தேதி, "டெண்டர்' அறிவிக்கப்பட்டு உள்ளது. 

விலையில் மாற்றம் இருக்காது : கடந்த ஆண்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, 250 ரூபாயாகவும், இதர பிரிவினருக்கு, 500 ரூபாயாகவும், விண்ணப்பத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டது. "இந்த ஆண்டும், விண்ணப்பத்தின் விலையில், எந்த மாற்றமும் இருக்காது' என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment