Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 15 February 2014

30 நிமிடங்களில், 10 திரைப்படங்களை பதிவிறக்கி பார்க்கும் வசதி: '4ஜி' மொபைல் சேவை அறிமுகம்

பார்தி ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் முதன் முதலாக, 4ஜி மொபைல் போன் சேவையை, பெங்களூருவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: மிகத் துல்லியமான, தடங்கலற்ற வீடியோ காட்சிகளை காண உதவும், 4ஜி தொழில்நுட்பத்திலான மொபைல்சேவை, பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி போன்களை பயன்படுத்துவோர், 3ஜி சேவைக்கான கட்டணத்திலேயே, 4ஜி சேவையை பெறலாம். இதற்கு, வேறு திட்டத்திற்கு மாறத் தேவையில்லை. தற்போதுள்ள, 'சிம்' கார்டை மட்டும், மாற்றிக் கொண்டால் போதும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில், எந்த இடத்திலும், அதிவேகமான இணையதள வசதியை பெறுவதற்கு, 4ஜி தொழில்நுட்பம் உதவுகிறது. குறிப்பாக, 30 நிமிடங்களில், 10 திரைப்படங்களை பதிவிறக்கி பார்க்கும் வசதியை, ஐபோன் உரிமையாளர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்தி ஏர்டெல் நிறுவனம், ஏற்கெனவே, கடந்த 2012ம் ஆண்டு, கோல்கட்டாவில், டி.டீஎல்.டி.இ., தொழில்நுட்பத்திலான, 4ஜி சேவையை துவக்கியது. தற்போது, இந்தியாவில் பரவலாக பயன்தரக்கூடிய, 4ஜி தொழில்நுட்பத்தில் மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. விரைவில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும், நாடு முழுவதும், 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

No comments:

Post a Comment