Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 14 February 2014

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 40 நாள் இலவச டி.இ.டி., தேர்வு பயிற்சி


பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, 40 நாள், இலவச ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) குறித்து பயிற்சி அளிக்க, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு, நாளை முதல், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் கூறியதாவது: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, டி.இ.டி., தேர்வு குறித்து, இலவசமாக சிறப்பு பயிற்சி அளிக்க, ஏற்கனவே, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சி, வரும், 22ல் துவங்கி, 40 நாட்களுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலம், இந்த பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்வு எழுத உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பயிற்சியில் பங்கேற்க, தங்கள் விவரங்களை, 14ம் தேதியில் இருந்து, 20ம் தேதிக்குள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவுகளின் அடிப்படையில், தேவையான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 50 பேருக்கு, ஒரு பயிற்சி மையம் அமைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. குறைவான நபர்கள் இருந்தால், வேறொரு மையத்துடன், அவர்களை இணைத்து, பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி மையம் குறித்த விவரங்களை, மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வரிடம் கேட்டு, தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment