அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்கம் சார்பில், பிப்.,5 ல் போராட்டம் நடக்கும்,'' என, அச்சங்க மாநில பொதுச்செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் நேரம் காலை 9:15 மணி என கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நேரம் மாற்றத்தால், கிராமப்புறங்களில் உரிய நேரத்தில் பஸ்கள் கிடைத்து, தேர்வுக்கு செல்ல முடியுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. நகர்ப்புற மாணவர்களுக்கு போக்குவரத்து நெருக்கடி பிரச்னையும் ஏற்படும். இதுகுறித்து கருத்து கேட்டு, தேர்வு நேரத்தை மாற்ற வேண்டும். அதுவரை பழைய நேரமே (காலை 10:00 மணி) தொடர வேண்டும். தொடர்ந்து அரசு பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் இருந்து மாற்றப்பட்ட மேற்பார்வையாளர்களை, மீண்டும் அதே பணிக்கு மாற்ற வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலகங்கள் முன், தலைமையாசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்பர், என்றார்.
No comments:
Post a Comment