Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 20 February 2014

6 கட்டங்களாக லோக்சபா தேர்தல்: தேர்தல் ஆணையம் திட்டம்

தற்போதைய லோக்சபாவின் ஆயுட்காலம் மே 31 அன்று முடிவடைகிறது.. ஜூன் 1ம் தேதி 16 வது மக்களவை பதவி ஏற்க வேண்டும். இந்நிலையில் லோக்சபா தேர்தலை  லோக்சாபா தேர்தலை ஏப்ரல் 15லிருந்து மே 15வரை 6 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
 இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 6ம் தேதிக்கு பின்னர் வெளியிடப்படும். வாக்குப்பதிவு தேதிகளை முடிவு செய்யும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.. மார்ச் 6ம் தேதிக்கு பின்னர் தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் அப்போது உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்படும்.
லோக்சபா தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களின் சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்துவதற்கு  தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.  மேலும்  இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் துணை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 81.4 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் சுமார் 10 கோடி பேர் முதன் முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment