Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 18 February 2014

மாணவிகளிடம், "சில்மிஷம்' : ஓவிய ஆசிரியரை கண்டித்து போராட்டம்


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் மேலவெள்ளுர் நடுநிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர், மாணவிகளிடம், "சில்மிஷம்' செய்ததாக எழுந்த புகாரையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது.
மேலவெள்ளுர் அரசு நடுநிலைப்பள்ளியில், பகுதி நேர ஓவிய ஆசிரியரான ஞானஉதயம், 45, மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதும், சிலரிடம் தவறான முறையில் நடந்ததாகவும், மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். பெற்றோர், சக ஆசிரியர்கள் தலைமையாசிரியரிடம் புகார் கூறியும், கண்டு கொள்ளவில்லை. கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.
பள்ளி ஆசிரியைகள், பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரிடம், உதவிக் கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார். தொடர்ந்து, கிராமக் கல்விக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, தவறு செய்த ஆசிரியர் உடந்தையாக இருந்த தலைமையாசிரியை ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர், பல நாட்கள் பள்ளியிலேயே தங்கியுள்ளார். பாலியல் தொந்தரவு குறித்து புகார் வந்த உடன், தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். வாரத்தில், 3 நாட்கள் மட்டுமே பணி என்றாலும், வாரம் முழுவதும் பள்ளிக்கு வந்துள்ளார்

No comments:

Post a Comment