அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில், விடுபட்ட மாணவியருக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பணியிடை பயிற்சி காலத்திற்கான உதவித்தொகை, உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, வரும் நிதியாண்டில் இருந்து, முதலாம் ஆண்டு, மாதம் 600 ரூபாய்; இரண்டாம் ஆண்டு, மாதம், 700 ரூபாய்; மூன்றாம் ஆண்டு, மாதம் 800 ரூபாய் வழங்கப்படும். பணியிடை பயிற்சி காலமான, 6 மாதத்திற்கு, தற்போது, மாதந்தோறும் உதவித் தொகையாக, 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை, வரும் ஆண்டில் இருந்து, 800 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment