Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 19 February 2014

ஏழு பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வில், நேற்று இரவு, திடீரென, ஏழு பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, இழுபறி நிலையில் இருந்து வந்தது. இன்று காலை, தமிழ்பாட ஆசிரியர்களுக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன உத்தரவை வழங்கும் நிலையில், நேற்று இரவு, திடீரென, விலங்கியல், புவியியல், மைக்ரோ பயாலஜி, உடற்கல்வி இயக்குனர், ஹோம்சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு www.trb.tn.nic.in என்ற, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் விழா நடைபெறுவதால், அவசர, அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், கணிதம், உயிரியல், ஆங்கிலம் உள்ளிட்ட, சில பாடங்களுக்கு, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதன் முடிவு வெளியிடவில்லை என, கூறப்படுகிறது.

No comments:

Post a Comment