நாடு இப்போது 14வது நாடாளுமன் றத்தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த மிகப்பெரும் ஜனநாயக நடவடிக்கையை எதிர் நோக்கி உலகமே கவனித்துக் கொண்டிருக் கிறது. “யாருமே இதுவரை யோசிக்காத பகுதி ஒன்று இருக்கிறது. அதுதான் பாவப்பட்ட தேர்தல் பணியாளர்களின்நிலை. தேர்தல் பணியாளர்கள் என்று தனிப் பிரிவு எதுவும் இல்லை என்பதும், மத்திய- மாநில அரசு ஊழியர்களும், ஆசிரி யர்களும்தான் இந்தப் பணியை நிறைவேற்றுகிறார்கள் என்பதும் பலருக் குத் தெரிந்திருக்கக்கூடும். இதுவரை நடந்துள்ள தேர்தல்களின் போதெல்லாம் இவர்களின் நிலை குறித்து யாரும் கவலைப்பட்டதில்லை.
ஒருபோதும் பேசாமல் இருப்பதைவிட தாமதமாக வாவது பேசலாமே என்றுதான் உங்க ளோடு பேசுகிறேன்,” என்று இதை நம் கவனத்திற்குக் கொண்டுவந்த, பெயரைக்குறிப்பிடக் கூடாது என்று கேட்டுக்கொண்ட, அந்த ஊழியர் தொடங் கினார்.“நாட்டின் ஜனநாயகச் செயல்பாட் டில் வாக்காளராக அல்லது வேட்பாள ராக கட்சிக்காரராக அல்லாமல் இப்படி ஒரு பணியாளராகப் பங்கேற்பதில் எனக்கும் என்னைப் போன்ற இதர ஊழியர் களுக்கும் பெருமிதம் உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு நாங்கள்எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுடைய பிரச்சனைகளை தேர்தல் ஆணையமும் கண்டுகொள் வதில்லை, எங்களின் நிர்வாகங்களும் பொருட்படுத்துவதில்லை என்பது தான் பிரச்சனை,” என்றார் அவர். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அரசு ஊழியர்கள் தேர்தல் ஆணையத் தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடு வார்கள். யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. தேர்தல் பணியை ஏற்க மறுப் பவர்கள் மீது சட்ட விதிகளின்படி சாதாரண ஒழுங்கு நடவடிக்கை முதல் கடுமையான குற்றவியல் நடவடிக்கை வரை எடுக்கலாம். தேர்தல் பணியை ஏற்காத ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட் டார் என்பது போன்ற செய்திகளை தேர்தல் நெருங்கும் நாட்களில் பத்திரி கைகளில் பார்க்கலாம்.தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மாநிலத் தேர்தல் அதிகாரிகள் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளை நியமிப் பார்கள். பிறகு மண்டல அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சி அதி காரிகள்தான் தேர்தலுக்குப் பொறுப்பு.“யாருக்கும் இதிலிருந்து விதிவிலக்குக் கிடையாது என்று சொன்னேனல் லவா. கர்ப்பவதியாக இருந்தாலும்சரி, கைக்குழந்தையுடன் இருந்தாலும் சரி,நோயாளியாக இருந்தாலும் சரி... இவர் கள் எந்த இரக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது. விதி என்றால் விதிதான். எந்த ஊருக்கு அனுப்பினாலும் மறுக்காமல் போகத்தான் வேண்டும்,” என்று அவர் பிரச்சனையின் மூலத்தைத் தொட்டுக் காட்டினார்.“தான் எந்தப் பகுதியில் எந்த பூத்தில் பணி செய்யப்போகிறோம் என்பது தேர்தலுக்கு முந்தைய நாள்தான் தெரிய வரும். அதற்கான உத்தரவைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அந்த இடத்துக் குச் சென்றுவிட வேண்டும். அங்கு தேர்தலுக் கான அனைத்துப் பொருட்களும் பின்னர் வந்து சேரும். அவற்றை வைத்து பூத்தைத் தயார் செய்ய வேண்டும். வாக்குப் பதிவு எந்திரங்களை இயக்கி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்து தானும் தயாராகி, கட்சி ஏஜண்டுகள் முன்பாக ‘மாக்போல்’ (மாதிரி வாக்குப் பதிவு) நடத்தி சீல்வைத்து குறிப்பிட்ட நேரத்தில் துவங்கவேண்டும்.
சில பேர் வேண்டுமென்றோ விவரம் தெரியாமலோ கொடுக்கும் குடைச்சலைச் சமாளித்து சுமூகமாகநடத்த வேண்டும். வாக்குப்பதிவிற்கு பிறகு ஏஜண்டுகள் முன்னிலையில் எந்திரத்துக்கு சீல் வைத்து விட்டுப் பொருட்களை ஒழுங்குபடுத்தி விட்டுக் காத்திருக்க வேண்டும். மண்டல அதிகாரி ஒவ்வொரு பூத்தாக வந்து பொருட்களைப் பெற்றுக்கொண்டு ஊதியத்தைக் கொடுத்துவிட்டுச் செல் வார். அதுவரை காத்திருந்து ஒப்படைக்க வேண்டும் - அதுஇரவு எத்தனை மணியானாலும் சரி.“மண்டல அதிகாரியின் நிலை அதை விட மோசம். கருவிகளை முதலில் தயார்செய்வதிலிருந்து கடைசியில் பாதுகாப் பிடத்தில் ஒப்படைக்கும் வரை இவர்கள் தான் பொறுப்பு. அலையோ அலை என்றுஅலைய வேண்டும். மேல் அதிகாரி எங்கோ உட்கார்ந்து இயக்கிக் கொண்டி ருப்பார். எந்தப் பிரச்சனை வந்தாலும் மண்டல அதிகாரிதான் சந்திக்க வேண் டும். இவர்களிடம் சரியான அளவில் பொருட் கள் கொடுக்கப் படாவிட்டால் நிலை இன்னும் மோசம். போதிய அளவு பூத் ஸ்லிப்புகள் கொடுக்காததால் நானே கடுமையாக அலைய வேண்டியதாயிற்று. மண்டல அதிகாரிக்கு நேரத்தில் பணம் வந்து சேராவிட்டால் சரியான நேரத்தில் அவரால் பூத் பணியாளர்களை விடுவிக்க முடியாது.
அதற்கேற்ப எல்லாமே தாமதமாகும். இரவு முழுதும் சாப்பாடு இல்லா மல், தூக்கம் இல்லாமல், பாதுகாப்பற்ற இடத்தில் வெட்டவெளியில் காத்திருந்து காலை எட்டு மணி அளவில் ஒப்படைத்தஅனுபவம் பலருக்கு உண்டு. நானும் ஒருமுறை அப்படி விடிய விடிய காத்திருந்தபோது, காலையில் வந்த உயரதிகாரி குளித்து, சாப்பிட்டு, நல்ல உடையுடன் புத் துணர்ச்சியோடு இருந்தார். நான் அடுத்த இரண்டு நாட் களுக்குப் படுக்கையில் கிடந்தேன்...” என்று தன் சொந்த நினை வைப் பகிர்ந்துகொண்டார் அந்த ஊழியர்.முதல்நாளே வந்து பூத்தில் தங்கும் தேர்தல் பணியாளர்களின் அடிப்படை வசதிகள் எதற்கும் மேலதிகாரிகள் பொறுப்பேற்பதில்லை. அங்கே இரவு தங்கும் வசதியோ, இரவு உணவு, காலைதேநீர், சிற்றுண்டி, மதிய உணவு எதற் கும் ஏற்பாடு இருக்காது. யாரும் பொறுப்பேற்கமாட்டார்கள். அங்கே இருக்கக்கூடிய கழிப்பறை சரியாக இருக்கிறதா, சுத்தமாக இருக்கிறதா, குளிக்குமிடம் முறையாக இருக்கிறதா என்பது அவர்கள் வரையறைக்குள் வராது.
கிடைப்பதைக் கொண்டு பணியாளர் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டியது தான். பெண்களின் உடல் நிலை காரணமாக அவர்களுக்குக் கழிப்பறை வசதியும், குளியல் வசதியும் ஒரு அடிப்படையான தேவை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால்அதிகார அமைப்புகளுக்கு சொன்னாலும் தெரிவதில்லை. ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகளையே செய்துகொடுக்காமல் அவர்கள் தேர்தலை மட்டும் சிறப்பாக நடத்திக்கொடுக்க வேண்டுமென்று எதிர் பார்க் கப்படுவது கொடுமை இல்லையா?வாக்குச் சாவடியில் சரியாகச் செயல் படாத அலுவலர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இப்படியொரு பின்னணியும் இருப்பது பெரும்பாலோருக்குத் தெரிய வாய்ப் பில்லை. தேர்தல் பணிகள் மேலும் செம்மையாய் நடைபெறுவதை உறுதிப்படுத்த, இனியேனும் ஆணையம் இதைப் பற்றியும் பரிசீலிக்க முன்வருமா?
No comments:
Post a Comment