Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 13 February 2014

அரசின் தடையை மீறி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்


அரசின் தடையை மீறி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.தமிழகம் முழுவதும் 68,000 சத்துணவு மையம், 34,000 அங்கன்வாடி மையம் உள்ளது. 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஊதியம், ஒய்வூதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு பணியாளர்கள், சமையலர்கள், அமைப்பாளர்கள் யாரும் பங்கேற்கக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநல துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.அரசின் இந்த தடை முயற்சியை மீறி சென்னையில் கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மாலை 3 மணிக்கு திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீ சார் குவிக்கப்பட்டனர். 

அரசின் உத்தரவை மீறி சென்னை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் கூட்டமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் கேசவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் துவக்கி வைத்தார்.ÔÔஎங்கள் கோரிக்கை நியாயமானது. அதை நிறைவேற்ற அரசு பரிசீலனை செய்ய வேண்டும். புதுச்சேரியில் சத்துணவு பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டது போல், தமிழகத்திலும் நிரந்தரம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட தயங்க மாட்டோம். எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேம்ÕÕ என்று வரதராஜன் பேசினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். உளவுத்துறை போலீசார் ஆர்ப்பாட்டத்தை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment