திருச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு சார்ந்த, அரசு சாரா, நிதி உதவி பெறும் மற்றும் நிதி உதவி பெறாத குழந்தைகள் இல்லங்களை இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யாவிட்டால் அவை மூடப்படும் என கலெக்டர் ஜெயஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தற்போதுள்ள குழந்தைகளையும், புதிதாக சேர்க்கும் குழந்தைகளையும் குழந்தைகள் நலக்குழு முன்பு உட்படுத்தி பதிவு எண் பெறுதல் வேண்டும். அதேபோல் குழந்தைகள் இல்லத்தை விட்டு விலகும் போதும் குழந்தைகள் நலக்குழு முன் உட்படுத்த வேண்டும்.
இந்த இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் விவரங்களை குழந்தைகள் கண்காணிக்கும் முறை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். குழந்தைகள் இல்லங்களை பதிவு செய்யாமலும், இளைஞர் நீதிசட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு குறைந்தபட்ச வசதிகள் இல்லாமலும் செயல்பட்டால் அந்த இல்லங்கள் கண்டிப்பாக மூடப் படும். குழந்தைகள் பதிவுக்கு சமூக நலத்துறை அல்லது சமூக பாதுகாப்பு துறையை உடனே அணுக வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment